ஒரு காட்டில் சிங்கம் அரசாண்டது. அது ஒரு நாள் தன் காட்டு விலங்குகள் எப்படி இருக்கிறதென பார்க்க காட்டுவலம் வந்தது.
காட்டுவலத்தில் சிங்கம் வரும் போது மாறுவேடம் அணிந்து வேறோர் நாட்டு சிங்கம் போல் வந்தது.
அது தன் காட்டில் உள்ள நீரோடை பக்கம் சென்றது. நீரோடை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காலம் போய், முழங்கால் அளவே நீர் இருந்ததாம்.
அங்கே தன் பசியாற்ற மீன் பிடிக்க காத்திருந்தது கரடி. அதைக் கண்ட சிங்கம், "என்ன கரடியாரே, எல்லாம் சுகமா?" எனக் கேட்டது.
கரடி மிகச் சோகமாய், "என்ன சிங்கண்ணே, ஒன்னும் தெரியாத மாதிரி பேசறீங்க. இப்ப எல்லாம் சாப்பிட ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது. ஓடையில் தண்ணி கம்மியானதுனால, மீனே இல்ல." என்றது.
அதற்கு சிங்கம், "நீங்க தான் தேன் வேட்டை ஆடுவீங்களே!" என்றது.
கரடி அதற்கு, "எங்கண்ணே, தேனீக்கள் இப்பல்லாம் உச்சாணிக் கொம்பில் தான் கூடு கட்டுகின்றன. நானோ பளுவா இருக்கிறதால, மரத்தில் ஏறினா கிளை உடைஞ்சிடுது" என்றது.
வலம் முடித்து தன் குகைக்கு திரும்பிய சிங்கம், ராஜ கர்ஜனை செய்தது. என்னமோ ஏதோ என நினைத்து எல்லா மிருகங்களும் குகை அருகே கூடின. கரடியும் வந்தது.
சிங்கம் தனது ஆசனத்தில் அமர்ந்து, "இன்று நான் ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். அது படி எல்லாரும் நடக்க வேண்டும்." என்றது.
எல்லா மிருகமும் உன்னிப்பாக கவனித்தது. அப்போது சிங்கம், "இனி தேனீக்கள் நிலத்திற்கு அருகே உள்ள கிளைகளில் மட்டுமே கூடு கட்டலாம். அவை உச்சாணிக் கொம்பில் கூடு கட்டினால் யார் அதைக் கண்டாலும் அழிக்க வேண்டும். இதுவே என் ஆணை." என்றது.
அப்போது அங்கே இருந்த ராணித் தேனீ சொல்லியது, "ஐயா சிங்கமாரே, நாங்க நிலமருகே கூடு கட்டினால் அங்கே ரீங்காரம் அதிகமாகும். யானையார் போன்றோருக்கு பிரச்சனை. அது தவிர, நாங்க தேன் சேகரிப்பது எமது குட்டிகளுக்காக. அதனால் தான் கரடியார் போன்றோர் எங்க கூட்டை கலைக்கக் கூடாதெனவே உயரத்தில் காடுகிறோம்." என்றது.
சிங்கமோ, "என்ன செய்யலாம்? கரடியாருக்கு உணவில்லாமல் இருக்கிறாரே" என்றது. அப்போது அங்கிருந்த யானை சொன்னது, "ஐயா ஓடையில் நீர் வரத்து அதிகம் இல்லாததாலே எல்லா மிருகங்களும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றன. நாம் ஓடையில் நீர் வரத்து அதிகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றது.
சிங்கம் உடனே ஒரு குழு அமைத்தது. தனது சிறந்த நண்பனான புலியை தலைவராக நியமித்து, தன் சொல் கேட்பவையான கழுதை, குரங்கு மற்றும் நரி என்ற மூவரை அக்குழுவில் சேர்த்தது. அக்குழு நீரோடையின் வரத்து ஏன் குறைந்ததெனும் உண்மை கண்டறிய ஓடையின் மூலமான மலைமேல் ஏறிச்செல்ல தொடங்கின.
சிறிது தூரம் சென்றவுடன் பள்ளத்தாக்கு பகுதியிலேயே புலியாருக்கு அயர்ச்சி ஆகிவிட்டது. புலி புல்வெளிவாழ் மிருகம். அதனால் மலைமேல் ஏறுவதில் அயற்சி தோன்றியது. அங்கே நிழலுடன் கூடிய மரங்களை பார்த்ததும், "நான் தான் குழுத்தலைவர். எல்லாரும் போய் பார்க்க தேவையில்லை. நான் இங்கே இருக்கிறேன். நீங்கள் மூவரும் சென்று வாருங்கள்" என்றது.
அதனால் மற்ற மூன்று குழு மிருகங்கள் சென்றன. சிறிது தூரம் சென்றதும் நரியாரின் கால்கள் முயலின் குழியில் மாட்டி விழுந்திட, நடக்க முடியாமல் தவித்தது. உடனே அதைக்கண்ட குரங்கு, "நரியாரே, நீங்கள் ஓய்வெடுங்கள். நாங்கள் போய் பார்த்து வருகிறோம்." என்றது.
அங்கிருந்து மற்ற இரண்டு குழு மிருகங்கள் சென்றன. சிறிது தூரம் சென்றதும் மலையில் வாழை மரங்கள் இருந்தன. அத்துனை தூரம் நடந்து வந்ததால் அயற்சியும் பசியும் மேலிட, குரங்கார் வாழைப்பழங்களை உரித்து உண்டது. மலைவாழை தித்திப்பாக இருக்க, வயிறு புடைக்க உண்டதும் அதனால் நடக்க முடியவில்லை. அப்படியே உறங்கியது.
வாழைப்பழத் தோலை உண்ட கழுதை மட்டும் சிறிது தூரம் சென்றது. அங்கே பச்சை பசேலென புல் இருக்க, கழுதை நினைத்தது, "நான் மட்டும் ஏன் மேலே போய் பார்க்க வேண்டும். இங்கே நிறைய புல் இருக்கின்றதே. நாமும் சாப்பிட்டு தூங்கலாம் என நினைத்தது." இரண்டு நாட்கள் உருண்டோடின. சென்ற குழு திரும்ப வரவில்லையே என சிங்கம் ஒரு கர்ஜனை செய்தது. காடு முழுதும் எதிரொலித்த கர்ஜனை மலையிலும் கேட்டது. உறக்கம் கலைந்து நான்கு மாக்களும் ஓடிப்போயின குகையை நோக்கி.
சிங்கம் கேட்டது, "என்ன குழு மாக்களே, சொல்லுங்க என்ன ஆச்சு?"
புலி சொன்னது, "மலையில் நிறைய மரங்கள் வளர்ந்துவிட்டன. அவை நீரை உறிஞ்சுவதால் நீர் வரத்து கம்மியா இருக்கு."
நரி சொன்னது, "சிங்கமாரே, மலையில் நிறைய குழிகள் உள்ளன. குழிகளின் வழியே பூமிக்குள் நீர் செல்லுவதால் ஓடையில் நீர் குறைகிறது."
குரங்கு சொன்னது, "இல்லை, இல்லை ஐயா. மலையில் வாழை மரம் நிறைய இருக்கின்றது. அவை நீரை உறிஞ்சுவதாலேயே நீர் வரத்து குறைகிறது."
கழுதையோ, "ஐயா சிங்கமாரே, இவர்கள் எல்லாரையும் விட அதிக தூரம் சென்றவன் நான். அங்கே மிகப் பெரிய புல்வெளிவைக் கண்டேன். அந்த புற்கள் நீர் வரத்தை கம்மியாக்குகின்றன." என்றது.
நான்குமே உண்மையான காரணத்தை கண்டறியவில்லையென சிங்கத்திற்கு புரிந்துவிட்டது. நால்வரையும் கடிந்துகொண்டு அவரவர்க்கு தண்டனை வழங்கியது. நரி மற்றும் கழுதையை நீரோடையின் ஓரம் இருந்த அழுக்குகளை அகற்ற கட்டளையிட்டது. புலியை காட்டில் உள்ள குப்பைகளை அகற்றச் சொன்னது. சுத்தம் செய்யும் நாட்களெல்லாம் மூவருக்கும் சமைத்து தர குரங்கை பணித்தது.
பின்னர் தன் நண்பனான கழுகை அழைத்து, "மலை உச்சியில் தானே வசிக்கிறீர். நீர் வரத்து ஏன் குறைந்ததென பார்த்து வாரும்." என்றது.
கழுகு உயரப்பறந்து சென்றது. ஆற்றின் ஊற்றருகே ஒரு பெரிய கல் உருண்டு ஊற்றுக்கண்ணை அடைத்திருப்பதை கண்டது. அதனால் ஆறு திசைமாறி வேறொரு காட்டிற்கு அதிக நீர் செல்லுவதைக் கண்டது. அதை சிங்கத்திடம் சொல்லியது கழுகு.
சிங்கம் உடனே யானையாரை அழைத்து, அக்கல்லை புரட்டிப்போடச் சொன்னது. யானையும் கழுகின் உதவியுடன் ஊற்றை கண்டடைந்து கல்லை புரட்டியதும், முன்பைப் போலவே நீர் வரத்து அதிகமாயிற்று. எல்லா மிருகங்களுக்கும் நீர் தேவையான அளவு இருந்தது. மீன்களும் பெரிதாயின. பெரிய மீன்களை உண்ட கரடியும் ஆனந்தமாக வாழ்ந்தது.
இந்த கதைக்கு கருவான தமிழ்ச்செய்யுள் பாக்களை பார்ப்போமா!
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்
திருக்குறள் எண் 0517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
திருக்குறள் எண் 0517
ஒரு செயலை சரியான வழியில் யார் முடிக்கக் கூடும் என்று ஆராய்ந்து, அச்செயலையே அவரை செய்யச் சொல்ல வேண்டும்.
முந்தைய நீதி: வாளாடு கூத்தியர்

தனக்குப் பிரியமானவர்கள் என்ற காரணத்துக்காக மட்டும் அறிய வேண்டியதை அறியாதவர்களை நம்பிக் காரியத்தை அவர்களிடம் விடுவது முழு மூடத்தனமாகும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
திருக்குறள் எண் 0517
ஒரு செயலை சரியான வழியில் யார் முடிக்கக் கூடும் என்று ஆராய்ந்து, அச்செயலையே அவரை செய்யச் சொல்ல வேண்டும்.
முந்தைய நீதி: வாளாடு கூத்தியர்
அடுத்த நீதி: உண்மையான வலிமை
No comments:
Post a Comment