பொன்னன் ஒரு தமிழ் ஆசிரியர். தமிழையே தன் வாழ்க்கை வழிகாட்டி என்று வாழ்பவர்.
அவரின் இல்லத்தரசி பெயர் கண்ணகி. பெயரைக் கேட்டதும் காதல் வயப்பட்டான் என்றால் பாருங்களேன்.
இவர்கள் இருவரும் சந்தித்த கதையே இக்கதை.
கண்ணகியின் தந்தையாரும் தமிழ்ப்பேராசிரியர். ஆதலால் தான் மகள் பெயரை கண்ணகி எனச்சூட்டினார். கண்ணகியின் தாயார் சற்றும் பழக்க வழக்கங்கள் மாறாதவர். அந்தணர் குலத்தினள் என்பதில் மனமேட்டிமை உண்டு. கணவர் பற்பல தமிழ்ச்சான்றுகள் அளித்தாலும் அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் தன் கையில் உள்ள முயலுக்கு மூன்றே கால் என சாதிப்பவள் தாய் அபிராமி.
தந்தையார் அன்பரசு தமிழ் வளர்ச்சிக்கென அடிக்கடி வெளியூர் செல்ல, தாயாரின் அரவணைப்பில், ஊட்டி வளர்த்த பிள்ளை கண்ணகி. கண்ணகி தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என வளர்ந்தாள். தாயார் இறந்த பின்னும் எல்லா பழக்க வழக்கங்களையும் செய்து வந்தாள் கண்ணகி. தன் தந்தையார் நடுவராகத் தலைமை தாங்கிய ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியின் காணொளியை காணும் போது பொன்னனின் சொல்வண்மையால் ஈர்க்கப்பட்டாள். ஆனால் வேற்று குலத்தவரோ எனும் ஐயம் வந்தது. தாயின் வளர்ப்பல்லவா....
அருகில் இருந்த தந்தையாரை நோக்கி, "அப்பா, இவர் யாரப்பா... நல்லா பேசுறாரு..." எனக் கேட்க
தந்தைக்கு, தன் மகள் பட்டிமன்றம் காண்பதே திருவிழா போலத்தான். அதிலும் தன் மாணவனைப் பற்றி கேட்டதும் ஒரே மகிழ்ச்சி.
"ஓ இவரா, என் மாணவன் தான். மிக நன்றாக தமிழ் பேசுவான். தமிழ் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் படிக்கின்றான்." என்று பதிலுரைத்தார்.
கண்டதும் காதலாவது மண்ணாங்கட்டியாவது என்று தன் தோழிகளிடம் எள்ளி நகையாடியவள் கண்ணகி. ஆயினும் சொல்வண்மை கேட்டதும் தன் சிறுவயதின் தந்தையை காண்பது போல் இருக்க, ஈர்க்கப்பட்டாள். கண்டதும் காதலல்ல... கேட்டதும் காதல்...
ஏதோ சாக்கு போக்கு சொல்லி தன் தந்தையைக் காண பல்கலைக்கழக தமிழ் மொழியியல் வளாகத்திற்குச் சென்றாள். சென்றதோ பொன்னனைக் குறித்து கேட்பதற்கு. ஆனால் சொன்னதோ அப்பாவை காண வந்திருக்கிறேன்.
பொன்னன் அந்நேரம் நூலகத்தில் இருந்து வகுப்பிற்கு வர இருவரும் கண்ணோடு கண் நோக்கினர்.
நீங்கள் யாருக்காக காத்திருக்கின்றீர்கள் என்று பொன்னன் வினவ, என்பெயர் கண்ணகி, என்றாள்.
நான் இவரின் பெயரை கேட்கவில்லையே, ஆனாலும் பெயர் சொல்கிறார். சரி பேச்சுக் கொடுப்போம் என் நினைத்தவர், "நல்ல தமிழ்ப்பெயர். இக்காலத்திலும் கண்ணகியை மறக்காமல் பெயர்வைத்திருக்கிறார்கள். என் பெயர் தங்கராசு. தமிழ் மாணவன் என்பதால் பொன்னன் என்பது என்னுடைய புனைப்பெயர்."
என் தந்தை முனைவர் அன்பரசு. இங்கே வேலை செய்கிறார் என்றதும், அடடா, எங்கள் முனைவரின் மகளா நீங்கள். வாருங்கள், அய்யா வகுப்பு முடிந்து வரும் நேரம் தான். இந்த அறையில் அமருங்கள் என்று உபசரித்தான்.
இல்லையில்லை, எனக்கு நேரம் ஆகிவிட்டது, தந்தையார் வந்தால் சொல்லிடுங்க என்று வெளியே விரைய, கன்னம் சிவக்க வெளிச்செல்லும் பெண்ணைக் கண்டு, என்னத்துக்கு வந்தாங்கன்னு தெரியலியே என குழம்பிட, வகுப்பு முடியும் மணியொலி கேட்டு நினைவு கலைந்து, தன் வகுப்பிற்கு சென்றான் பொன்னன்
அடுத்தடுத்து வகுப்புகள் என அந்நாள் முழுதும் கழிய, பொன்னன் கண்ணகி வந்ததையே மறந்து போயிருந்தான். மாலையில் பேருந்து பிடித்து வீட்டிற்கு செல்லும் வழி, கடற்கரையோரம் இருந்த வெட்டவெளி. கண்ணகி சிலை யாரெல்லாம் இறங்கனுமோ வெளியில வாங்கம்மா, எனச்சொல்லும் நடத்துனரின் ஓலம் கண்ணகியை நினைவுபடுத்தியது. அடடா, ஐயாவிடம் சொல்லவில்லையே, நாளை சொல்லிவிடலாம். இல்லையில்லை, இன்றே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லி விடலாம் என்று நினைத்தவன் தன் கைப்பேசியை அழுத்தினான். மின்கலம் செயலின்மையால் அணைந்த கைப்பேசியைக் கண்டு, "அடச்சே. வேற ஒன்னு வாங்க வேண்டும், சரியான நேரத்தில் வேலை செய்ய மாட்டேங்குது" என மனதில் நினைத்துக் கொண்டான். (மனதில் கொச்சை தமிழில் நினைத்தாலும் வெளியில் பேசுவது தூய தமிழ் தான்)
வீடு வந்ததும் தொலைக்காட்சியில் ஏதோ தமிழ் ஆராய்ச்சி குறித்த உரையாடலை அவரின் தமக்கை போட, அதில் ஆழ்ந்து கண்ணகியை மறந்தான். அடுத்த நாள் பல்கலைக் கழகத்தில் ஏதோ விழா. அதற்காக எல்லா தலைவர்களும் சென்றிருந்தார்கள். வகுப்பில்லை என்பதால். நூலகம் சென்றான் பொன்னன். நூலத்தின் உள்ளே சென்றதும் ஏதோ மாறுபாடு தெரிந்தது. நேற்று இல்லாத மாற்றம், அதே நூல்கள், அதே காப்பாளர், ஆனால் அங்கே வண்ணச் சேலை உடுத்தி கண்ணகி அமர்ந்திருந்தாள். காதல் வயப்பட்டால் வரத்தானே வேண்டும்...
கண்ணகியைக் கண்டதும் நினைவு கொண்டான். மெல்ல அருகே சென்று, "கொஞ்சம் வெளியில் வருகிறீர்களா, உங்களோடு பேச வேண்டும்" என்றான்
விரல்நுனியில் கட்டுண்ட பொம்மலாட்ட பொம்மை போல் பின்சென்றாள் கண்ணகி.
"என்னை மன்னித்து விடுங்கள், நீங்கள் நேற்று வந்ததை ஐயாவிடம் சொல்ல மறந்துவிட்டேன்" என்றதும்
"அப்பா, நீங்க சொல்லிடுவீங்களோ என பயமா இருந்திச்சு. சொல்லலையா... நல்லது தான்" என்றதும் வியப்பாக பார்த்தான்.
அவள் மேலும், "தங்கராசு சார், உங்கள பாக்கத் தான் வந்தேன். அப்பாவிற்கு தெரிஞ்சா ஏதாவது சொல்வாரோன்னு பயம்" என்றவளை வியப்போடு பார்த்தான்.
"ஒன்னுமில்லை, ஒரு தமிழ் புத்தகம் வேண்டும். அப்பாவிடம் கேட்டால் கோவிப்பார். அதான் உங்களிடம் கேட்கலாம் எனவந்தேன்.
"என்ன புத்தகம் என்று சொன்னால் நான் வாங்கித்தருகிறேன்." என்றான் பொன்னன்.
"பதினென்கீழ்க்கணக்கு பொருளுரை வேண்டும். ஒரு சின்ன ப்ரோஜெக்ட். தமிழ்ப்புலவரின் மகள் என்பதால் தமிழும் அறிவியலும் என்ற தலைப்பை எடுத்து ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டும். அப்பா எப்போதும் பிசி. அதனால் தான் உங்களை நாடி வந்தேன்" என்றாள்
"அப்படியா, பதினென்கீழ்க்கணக்கு என்பது ஒரு நூல் அல்ல. பதினெட்டு நூல்களின் தொகுப்பு." என்றார்.
"என்னவோ அப்பா அடிக்கடி சொல்வார். பதினென்கீழ்கணக்கு, மேல்கணக்குன்னு அதான் கேட்டேன்" என்றாள்
"அந்த பதினெட்டு நூல்கள் என்னென்ன தெரியுமா?" என்று வினவ
"தெரிஞ்சா நல்லாத்தான் இருக்கும், ஆனா இப்போ நேரமில்லை. காலேஜ் செல்ல வேண்டும். நான் வருகிறேன்", என்று சென்றாள்.
சென்றவளின் வழிநோக்கி, தமிழ் முனைவரின் மகள், ஆனால் பதினென்கீழ்கணக்கு என்ன எனக்கேட்கிறார், என வியந்தான்.
சிலநாட்கள் உருண்டோட, ஒருநாள் மாலை பேருந்து நிலையத்தை நோக்கி நடந்த பொன்னனை, யாரோ வழிதொடர்ந்து வருவது போல் இருந்தது. பின்னே திரும்பினால் யாருமில்லை. சரி, நம்மை யார் தொடரப் போகிறார்கள் என்று பேருந்தினுள் சென்று அமர்ந்தாலும். யாரோ தன்னை நோக்குவதாகப் பட்டது. மனதில் ஏதோ நோயோ எனக்குழம்பினான். பின்னால் முகமூடி அணிந்து கண்ணகி தான் அவனை பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தாள். அவன் இருக்குமிடம் காண்பதற்காக.
பொன்னனுக்கோ வேறு நினைவுகள் வந்திட, தான் சில நாட்களாக நூலகத்தில் ஆராய்ந்து வரும் "தமிழும், அறிவியலும்" தலைப்பில் மூழ்கிப்போனான். எண்ணங்கள் கலைந்தது தூய தமிழ் கேட்டு. ஏனப்பா, கலங்கரை விளக்கம் வந்துவிட்டது, கண்ணகி சிலை வந்தால் சொல்லுங்கள் என்கிறாயே, எனக்கூறிய நடத்துனரை வியப்போடு எல்லாரும் பார்த்தனர். சிலருக்கு கலங்கரை விளக்கத்திற்கு பொருள் தெரியவில்லை. சிலர், ஏன்தான் தமில் தமில்ன்னு இப்படி உசுர வாங்குறாங்களோ, என முனுமுனுத்தனர்.
அன்று மாலை அன்பரசன் வீட்டில் நடைப்போட்டுக் கொன்டிருக்க, அடுப்படியில் இருந்து வந்த கண்ணகி, "என்னப்பா, இவ்வளவு பலமான யோசனை?"
"என்னம்மா, நீயாவது தமிழைச் சரியாக பேசக்கூடாதா, ஏன் நினைவில் தொலைந்துள்ளீர்கள் எனக் கேட்கலாமே..." என்றார் முனைவர்
"சரி, சரி, முனைவரே, எப்போ அப்பாவாக வீட்டில் இருப்பீர்கள்?" என சினந்த மகளைக் கண்ட முனைவர்,
"வாம்மா, இப்படி அமர்ந்து கொள். என்மனதில் உள்ள குழப்பத்தை சொல்கிறேன்" என்றார்
சமையலை முடித்தக் கையோடு வந்திருந்ததால், சிறிது நேரம் அப்பாவோடு பேசலாம் என வந்தால், இவர் குழப்பம், கிழப்பம் என சொல்கிறாரே, என வந்தவள் தந்தை அருகே முக்காலியில் அமர்ந்தாள்.
"இந்த பொன்னன் இருக்கானே, அதாம்மா, அந்த பட்டிமன்றத்தில் பாத்தியே, அவன் இன்று ஒரு தலைப்பை எடுத்து தன் முனைவர் பட்டத்தின் ஆய்விற்கு பயன்படுத்தப்போவதாக சொன்னான். தலைப்பு என்னன்னு தெரியுமாம்மா?" என்று ஒரு சிறு இடைவெளி விட பொன்னனின் பெயர் கேட்டதும் சற்றே வெட்கினாள் கண்ணகி.
"தமிழும், அறிவியலும் - பதினென்கீழ்கணக்கில் வரும் அறிவியல் ஆழங்கள்" என்றார்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆயிற்று. தந்தையின் முகத்தை காணாதுவேறு திசையில் நோட்டமிட்டு, "அப்பா, அவர் என்ன தலைப்பு எடுத்தால் எனக்கென்னப்பா." என்றாள்.
"இல்லம்மா, தலைப்பில் இல்லை குழப்பம். அந்த தலைப்பிற்கு காரணம் கண்ணகி என்று அவன் சொன்னது தாம்மா குழப்பம்."
"ஏதாவது சிலப்பதிகாரத்தில் அறிவியல் கிறிவியல் இருக்கும். அதான் அப்படி சொல்லிருப்பார் போல..." என்று சொல்லிக்கொண்டே அடுப்படிக்கு விரைந்தாள் கண்ணகி.
"அட இல்லம்மா... சிலப்பதிகாரம் பதினென்கீழ்கணக்கில் இல்லை. அதான் குழப்பமே" என்று சற்றே குரல் உயர்த்திச் சொன்னார்.
"சரி சரி, நேரத்துக்கு சாப்பிட வாங்கப்பா..... " என்று பேச்சை மாற்றினாள் மகள்.
தூக்கி வாரிப்போட்டது கண்ணகிக்கு. உள்ளே சென்று, சில நாட்கள் அவரைக் காணாதிருப்போம் என முடிவு செய்தாள்.
சிலநாட்கள் உருண்டோட, பொன்னனின் தமக்கை காதல் வயப்பட்டாள். பொன்னன் தாய் தந்தை இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. பொன்னனின் தந்தை சேர்த்து வைத்த பணமும், அவர் கட்டிய வீடும் அண்ணன் தங்கை இருவரும் படிக்க உறுதுணையாக இருந்தது. ஆனால், திருமணம் என்றால் மிகவும் செலவாகுமே. பொன்னனோ இன்னும் படிப்பை முடிக்கவில்லை. பலரும் சொன்னது போல் பட்டப் படிப்பின் பின்னர் ஏதாவது வேலைக்குச் சென்றிருக்க வேண்டுமோ, என எண்ணத் தொடங்கினான்.
தமக்கையின் காதல் அறிந்ததும் சற்றே அதிர்ந்தான். அவள் பொன்னனிடம் வந்து, "அண்ணா, அவர் மிகவும் நல்லவர், மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாள். என்கல்லூரி தோழியின் அண்ணன். முதுகலை பயின்றவர் அண்ணா. மீன்கள் அங்காடியில் மொத்த விற்பனை செய்கிறார், நல்ல வருமானம்," என்றாள்.
மீனவனா, என்று சற்றே தயங்கினான் பொன்னன்.
அடுத்த நாள் தன் ஆய்வுத் தலைப்பில் திருக்குறளை புரட்டிய போது சிற்றினஞ் சேராமை என்ற 10 குறட்பாக்கள் படித்து, மீனவ இனத்தின் பிள்ளைக்கு தமக்கையை கொடுப்பதில் ஐயம் கொண்டான்.
ஆனால் தமக்கையின் மனதை நோகடிக்க மனமில்லை. சரி பார்ப்போம் என்று சொல்லியிருந்தவன், தமக்கையின் காதலனை சந்திக்கச் சென்றான். அவரும் தாய் தந்தை இல்லாதவர் என்றும், ஒழுக்கத்தில் சிறந்தவராக இருந்தார். மீன் வணிகம் செய்தாலும் அவர் சைவமாம். தமிழ் படித்து புலால் உண்ணாமை கொண்டாராம்.
அடடா, மீனவர், மீன் வணிகம் செய்பவர் என்று எள்ளி நாம் தள்ளியிருந்தால் இத்தகைய பண்பாளரை நம் தங்கை இழந்திருப்பாளே என்று நினைத்தார் பொன்னன்.
மனம் இலகுவாகி, திருமண ஏற்பாடு செய்யத் தொடங்கினான்.
தன் உறவின் முறையாரிடம் பணம் கடன் கேட்க, எல்லாரும் கைவிரித்தனர். எதை நம்பி பணம் கொடுப்பார்கள். பொன்னன் இன்னும் படிப்பையே முடிக்கவில்லை.
சரி, வட்டிக்கு பணம் வாங்குவது தான் மேல் என்று வட்டிக்கு பணம் வாங்கச் சென்றான். நாற்பதாயிரம் கடன் வாங்குவதற்குள் போதும் என்றாகி விட்டது. கணக்கு போட்டு பார்த்தால் இன்னும் பத்தாயிரமாவது வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தான். நாட்கள் உருண்டோட, இரண்டு மாதம் கழிந்தன. வங்கியில் நாற்பதாயிரத்தோடு அப்பாவின் பணம் மூன்றாயிரம் இருந்தது.
ஒருநாள் மாலை தங்கை தன் காதலனுடன் கைப்பேசியில் பேசுவதைக் கண்ட பொன்னன், திருமணத்திற்கு பிறகு பேச சிறிது வைத்துக்கொள்ளுங்கள் என்று ஏளனத்தை பொருட்படுத்தாது போனாள்.
"வீட்டின் வெளியில் யாரோ வருவதைக் கண்டவன், வட்டிக்கு காசு கொடுத்தவர் வந்திருந்தார். தம்பி, இரண்டு மாசமா வட்டி கொடுக்கல்ல. அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்" என்றார்.
"ஐயா, நான் முழு வட்டியோடு ஒரு வருடத்தில் கொடுக்கிறேன் என்று தானே வாங்கினேன்" என்ற பொன்னனை, இல்லப்பா, மாதம் 800 ரூபாய் வட்டி கொடுக்கனும். மத்தவங்களுக்கு 1200, உங்களுக்காக 800.
"ஐயா, என்னால மாதாமாதம் வட்டி கொடுக்க முடியாது" என்றவனை,
"அப்போ அசலோட கொடுத்துடு தம்பி. மொத்தம் 41600, இரண்டுமாச வட்டி சேர்த்து. இன்னும் ரெண்டு நாள்ல வர்ரேன்." என்று நடைபோட்டார் கடன் கொடுத்தவர்.
அடடா, வங்கியில் உள்ள எல்லா பணமும் போய்விடும் போல இருக்கே, என்று கலங்கினான் பொன்னன்.
மனம் வெதும்ப, உணவு உட்கொள்ளாது உறங்கப்போனான் பொன்னன்.
சில மணிநேரம் கழித்து உறங்க வந்த தமக்கை, அண்ணன் உண்ணாமல் உறங்கச் சென்றதைக் கண்டு வருந்தினாள். பின்னர் அடுத்தநாள் வங்கி சென்று எல்லா பணத்தை எடுத்து வந்து கொடுத்ததாக சொன்னதும் அதிர்ந்தாள்.
தன் காதலனிடம் சொல்லியவள், வருந்த, காதலனோ, திருமணத்திற்கு கடன்வாங்க யார் சொன்னார்? எனக்கு பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் போதும் என்றதும், மகிழ்ந்தாள். அண்ணனிடம் சொன்னாள்.
பொன்னன், மனம் பூரித்தான். எத்தகைய நல்ல ஆணை என் தங்கை தேர்ந்தெடுத்துள்ளாள் என்று பெருமைக் கொண்டான். தன்னிடம் இருந்த மீதமுள்ள பணத்தில் பதிவுத் திருமணம் செய்து முடித்தான்.
தங்கை வீடு விட்டுச் சென்றதும் மாலையில் வெறிச்சென ஆனது இல்லம். அதனால் பொது நூலகம் சென்று மாலைப் பொழுதை கழிக்க ஆரம்பித்தான்.
கண்ணகியும் தன் படிப்பை முடிக்க மும்முரமாய் படித்தாள். காதலனின் தங்கை திருமணம் குறித்து கேள்விப்பட்டாள். ஆனால் மீனவ இனத்தான் தான் மாப்பிள்ளை என்றதும் சற்றே முகம் சுளித்தாள்.
எல்லாம் சித்திரை 1 வரை தான். சித்திரை திருநாளின் பட்டிமன்றத்தில் பொன்னனின் வாதத்தைக் கேட்டவள் மதி மயங்கினாள். கல்லூரி முடிந்து விடுமுறை நாட்கள். அப்பாவும் வீட்டில் இருக்கிறார். எப்படி வெளியில் போய் பொன்னனை காண்பது என்று குழம்பின போது அப்பா சொன்னார், "அம்மாடி, நான் கல்லூரி நூலகம் வரை போக வேண்டும். பெரியாழ்வார் பற்றி சில குறிப்புகள் எடுக்க வேண்டும் "
"அப்பா, எனக்கும் போரடிக்குது, நானும் வரட்டுமா?"
"வாயேன். நீயும் சில நூல்கள் படிக்கலாம்..." என்றார்
இருவரும் நூலகம் சென்றனர். சித்திரை மாதம் ஆனாலும் நூலகம் மட்டும் 365 நாட்கள் திறந்திருக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக விதி. ஆய்வு செய்யும் மாணவர்கள் அங்கேயே கிடப்பதும் அறிந்ததே.
அப்பா தமிழ் நூல்களைக் காணச் செல்ல, மகள் கண்களைக் கொண்டு சல்லடைப் போட்டு தேடினாள் தன் ஆண்மகனை...
சிலநேரம் ஆனதும் உள்ளே நுழைந்தான் பொன்னன். என்னவோ நூலகமே ஒளிவெள்ளத்தில் மூழ்கியது போல் உணர்ந்தாள் கண்ணகி.
கண்களால் பேசி உள்ளே அருகில் அமரச் சொன்னாள். தன் தந்தை இருப்பதையும் சொன்னவள், ஏன் இவ்வளவு நாட்கள் பேசவில்லை எனக் கேட்டாள்.
அப்போது தான் காதலியின் கடைக்கண் பார்வைக்கு தான் அடிமை ஆனதை உணர்ந்தான் பொன்னன். "கண்களால் சிறைசெய்யும் பெண்அணங்கே, கண்ணகி என்ற பெயர்கொண்டு என்னை கோவலனாக்கினாயே" என கவிதை ஊறிவர, அடக்கினான். கண்களில் தெரிவது காதலா, அல்லது வேறா, அறியாமல் சற்றே குழம்பினான்.
அவள் பெயர் மீது எனக்கு காதல். அவள் எதனால் என்னை பேசவில்லை என்கிறாள்? காதலாலா, அல்லது நட்பா? தெரியாமல், கிசுகிசுத்தான்.... நாளை மாலை வாருங்கள்... நிறைய பேசலாம்....
அடுத்த நாள் ஏதோ சாக்கு சொல்லி நூலகம் வந்தாள். பொன்னன் வெளியில் வாருங்கள் என்று கூறி கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். கடற்கரையில், ஆதவன் மேகத்தில் மறைந்து கண்ணாமூச்சி ஆட, நடைப் பயின்று செல்லும் அவன் எழிலைக் கண்ட கண்ணகி, "என்ன பேசனும்னு வரச்சொல்லிட்டு, சும்மா நடந்தா எப்படி?" என்றாள்
"இப்படியே காலம் முழுதும் தோள்சேர்ந்து நடைப்பழக ஆவல்." என்றான்
மென்மையாக தன் காதலை வெளிப்படுத்தியது அவளுக்கு பிடித்திருந்தது. "நடக்கலாமே, நடக்கத்தானே வந்திருக்கேன்" என்றாள்...
புன்முறுவல் பூண்டவன் சிறிது வேர்க்கடலை வாங்கினான். இரண்டு பொட்டலம் வேர்க்கடலை வாங்கியவன், ஒன்றை கண்ணகியிடம் கொடுத்தான். அவள் தன் கையில் பொட்டலம் பிரிக்காமல் வைத்திருந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு சிறுவன் கண்ணகியின் கையில் இருந்த வேர்க்கடலை பொட்டலத்தை தட்டிப் பறித்து ஓடினான். கண்ணகிக்கு கோவம். வேர்க்கடலை போனதே என்று அல்ல. தன் காதலன் வாங்கிக் கொடுத்த முதல் திண்பண்டம் ஆதலால் கோபம். "அடேய் திருட்டுப் பயலே" என்று வையத்தொடங்கினாள்.
போகட்டும் விடு, கண்ணகி.... சாப்பிடும் பொருள் தானே. இதொ என்கிட்ட இருக்கு... என்று தன்கையில் இருந்த பாதி பொட்டலம் கொடுத்தான்.
"நீங்க வேற.... திருடுவது தப்பில்லையா?" என்றதும் பொன்னன்
"நம் மொழி, களவைக் கலையாக சொல்கிறது தெரியுமா?" என்றதும்.... "ஐயா, புலவரே... வீட்டில் ஒரு முனைவர்... காதலனும் தமிழ் மாணவன்... செத்தேன் நான்" என்று பொய்ச்சினம் காட்ட, இருவரும் சிரித்தனர்.
உருண்டோடியது சில மாதம். பட்டம் முடித்து முதுகலை சேர விண்ணப்பித்திருந்தாள் கண்ணகி. ஆய்வின் முடிவறிக்கை கொடுப்பதற்கு முனைவரின் வீட்டிற்கு வந்திருந்தான் பொன்னன்.
முனைவர் ஆய்வறிக்கையில் மூழ்க, சாளரம் வழியே எட்டிப்பார்த்தாள் கண்ணகி. கண்களால் இருவரும் பேசினர். முனைவர் படித்தப் பின், "ஆய்வறிக்கை மிக நன்றாக உள்ளது பொன்னா. ஆனால் தலைப்பு தோன்றிய விதம் தான் சரியாக கூறவில்லை என்றார்."
பொன்னனோ "ஐயா, அது வந்து..." என்று இழுக்க...
"சொல் பொன்னா, என்ன வந்து போயின்னு இழுக்கிறாய்...."
"தலைப்பிற்கு காரணி உங்கள் மகள் கண்ணகி.... நாங்கள் இருவரும் காதலர். உங்கள் அனுமதியோடு திருமணம் செய்ய ஆவல்..." என்றதும். "நீங்கள் இருவரும் கடற்கரையில் நடைபயிலும் போது கண்டிருக்கின்றேன். நண்பர்கள் என்றல்லவா நினைத்தேன்... ஆனாலும் உனக்கு மிகவும் மனஅழுத்தம். திண்ணையை கொடுத்தால் மடத்தையே கேட்கிறாய். போடா போ. தமிழ் தந்த என்னிடம் பெண்ணைக் கேட்கிறாயா?" என்று வையத் தொடங்கினார்.
அப்பாவின் குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்ட கண்ணகி அறைக்குள் நுழைந்தாள்.
"என்னப்பா, அப்படி என்ன கேட்டார்? திருமணம் புரியத் தானே கேட்கின்றார். மாணவர் என்பதால் மறுக்கின்றீரா, அல்லது வேறென்ன குறைக் கண்டீராம் பொன்னரிடம்?"
"ஓஓ... பொன்னன், பொன்னர் ஆகிவிட்டாரா... என்ன என் பெண்மகள் சில மாதங்களாக தமிழ் நன்றாகப் பேசுகிறாளே என்று பார்த்தேன். காதல் தான் காரணமா...."
"தமிழ் தமிழ் என்று உயிரை விடும் உங்களிடம் இருந்து இம்மாதிரி காதலுக்கு எதிரான சொற்களை நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை ஐயா" என்றான் பொன்னன்.
"இரு இரு... உன் ஆய்வறிக்கையை நான் தான் கையெழுத்திட வேண்டும். அதில் குறை கூறினால் முனைவர் பட்டம் கிடைக்காது தெரியுமா..." என்று சினத்தோடு எழந்து வெளியில் போனார் தந்தை.
சில நாட்கள் உருண்டோடின. பதினென்கீழ்கணக்கில் நாலடியார், திருக்குறள் இரண்டை மட்டும் ஆய்வதே பெரும் வேலையாக இருந்து அதில் ஆய்வறிக்கை ஆயத்தம் செய்த பொன்னன், மற்ற சில நூல்களையும் படிப்போம் என்று முடிவுசெய்து நான்மணிக்கடிகையை படித்தான்.
அதில் வந்த
எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேற்பட - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.
என்ற பாடலைக் கண்டு வியந்தான்.
தன் வாழ்வில் தான் செய்த தவறுகள், தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் பொருந்தியிருப்பதைக் கண்டவன் வியந்தான்.
பாடலின் பொருள் பின் வருமாறு
எவரையும் எளியரென்று இகழாதே;
சிறந்த பொருளாயினுந் தகாதவர் கொடுக்க வாங்காதே;
தகாதன செய்தாலும் ஏழை மக்களைச் சீறாதே;
தகாத சொற்களைப் பதைத்துச் சொல்லிவிடாதே.
பாடலை எழுதி, அப்படியே முனைவருக்கு ஒரு மடலையும் எழுதினான்.
மடலைத்திறந்து படித்த முனைவரின் கண்களில் கண்ணீர் பொங்கியது.
கூறற்க கூறல் லவற்றை விரைந்து. என்னும் கடிகை வரி அவரைச் சுட்டது. அடடா... நல்ல தமிழ் மாணவனை இழிவாகப் பேசிவிட்டோமே என்று வருந்தினார்.
காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார் முனைவர்.
பொன்னனும் கண்ணகியும் வாழ்வில் இணைந்த கதை இது தான்.
முந்தைய நீதிஅவரின் இல்லத்தரசி பெயர் கண்ணகி. பெயரைக் கேட்டதும் காதல் வயப்பட்டான் என்றால் பாருங்களேன்.

தகுதி யுடையவரை தேர்ந்தெடுத்தல்
அடுத்த நீதி
No comments:
Post a Comment