காட்டில் ஒரு தேர்தல்

ஒரு சிறிய காடு. காட்டிற்கு அரசன் எனப்படும் சிங்கம் தன் காட்டில் கம்பீரமாக நடை பயின்று வந்தது.

ஒருநாள் காலை ஞாயிறு வந்ததும் கம்பீரமாக கர்சித்தது அரசன்.
இரவு வேட்டையாடி பின்னர் விடியலில் தான் கண்ணுறங்கிய நரி அலறியடித்து எழுந்தது.

அடச்சே ஒருநாள் தூங்கி இளைப்பாறலாம் என்றால் இந்த கிழசிங்கம் கர்சித்து உறக்கம் கலைக்கிறதே என்று சினங்கொண்டது.

சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்த நரி சிறுகூட்டம் கூட்டியது. கூட்டத்தில் கேட்டது நரி. கிழசிங்கம் கர்ஜனையால் யாருக்காவது தொந்தரவு இருக்கிறதா என்று கேட்கவும் பலர பலவிதமாக பதில் கூறினார்கள்.

குரங்கினத்தின் தலைவன் சொன்னது : நம் காட்டிற்குள் மனிதர்கள் வேட்டையாட வராதது

யானை சொன்னது: எங்கள் பிளிரல்கள் கூட மனிதர்கள் வராது இருக்க காரணம் என்றது

புலி சொன்னது: எங்கள் பகுதியில் நான் தான் அரசன்.

நரி கூட்டம் நடைபெறும் விதம் மாறுபடுகிறது என்பதை கண்டு "நாமெல்லாம் ஒரு முடிவுக்கு வருவோம்" என்று ஒரு ஆலோசனை முன்வைத்தது.

எல்லாருக்கும் அந்த ஆலோசனை சரியாக பட்டதால் அனைவரும் சேர்ந்து சிங்கம் இருந்த குகைக்கு வெளியே நின்று சிங்கத்தை அழைத்தனர்.

சிங்கமும் வெளியே வந்தது. வந்ததும் நீ சொல் நீ சொல் என்று பேச, ஒரு கர்ஜனை செய்தது சிங்கம்.  யார் என் நேரத்தை வீணாக்க இப்படி செய்தது என்று கேட்க, நடுங்கி குரங்கு சொன்னது "நரியார் சொல்ல வந்தது என்னவென்றால் "

சிங்கம் சினத்துடன் நரியாரால் பேச இயலாதோ.... நீரென்ன வக்கீலா? என்று கேட்டதும் நரி பலம் கொண்டு தன் ஆலோசனையை கூறியது

ஆலோசனையின் சுருக்கம்

காட்டில் ஒரு தேர்தல் வைத்து அரசனை தேர்வு செய்ய வேண்டும்.
ஆலோசனையை கேட்டதும் சிங்கம் சினங்கொண்டு நரியை அடித்திட முனைய யானை இடையே வந்து தடுத்தது.

அவர் சொன்ன ஆலோசனையில் என்ன தவறு? எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவரே அரசனாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  இது என்ன தவறானதா?

ஓ... முன்னதாக முடிவு செய்துதான் வந்திருக்கிறீர்கள்.  சரி தேர்தல் நடத்தலாம்.

ஒரு தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது.  தேர்தல் விதிமுறைகளை வகுத்தனர். தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் காட்டு காளை மற்றும் வயதான குரங்கு

விதிமுறைகள்

தேர்தல் பரப்புரை காட்டு எல்லைக்குள் செய்ய வேண்டும்

எல்லா மிருகங்களும் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு

யாரும் யாரையும் மிரட்டக் கூடாது

தேர்தலில் போட்டியிடுவோர் வாக்குறுதிகளை தரலாம்

தேர்தல் அன்று காட்டின் பரப்பளவு வைத்து வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்

தேர்தல் பரப்புரை தொடங்கியது

சிங்கம் தன் அரசாட்சியால் காடு மிகவும் அமைதியான முறையில் இருப்பதாக சொன்னது.

நரி தன் பரப்புரையில் சிங்கம் தன் கடமையை செய்யவில்லை என்று சொன்னது

யானை தன் பரப்புரையில் "இந்த மாமிச உணவு உண்ணும் சிங்கம் நரியால் நமக்கு என்றுமே ஆபத்து" என்று சொன்னது

வேறு மிருகங்கள் எதுவும் போட்டியிட முன்வரவில்லை

நரிக்கு தேர்தல் நெருங்க நெருங்க கிலி பற்றியது. எண்ணிக்கையில் தான் பின்தங்கிய நிலையில் உள்ளதை கண்ட நரி காட்டில் உள்ள ஒரு சிறு குளத்தில் சென்று குளிக்க இறங்கியது.

அப்போது அங்கே இருந்த மீன் கூட்டம் கண்டு,  அடடா இவ்வளவு மீன்கள் நமக்கு ஆதரவு தெரிவித்தால் நாம் தான் அடுத்த அரசன் என்று மனக்கணக்கு போட்டது.

மீன்கூட்டத்திற்கு தன் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது நரி

தேர்தல் நாள்

வாக்குச் சாவடிகளில் சிங்கம் தனது மனைவியர் மற்றும் உற்ற நண்பர்கள் கரடி, புலி இவற்றை பார்வையிடும் படி நிறுத்தியது.

வாக்குச் சாவடிக்கு நரி ஆதரவாளர்கள் மீன் நீர்விட்டு வெளிவர சில மீன்கள் மடிந்த உடன் மற்ற மீன்கள் வாக்குறுதி வேண்டாம் உயிர் தப்பினால் போதும் என்று வாக்களிக்க போகவில்லை

சிங்கத்தின் ஆதரவாளர்கள் போட்டி போட்டு வரிசையில் நின்று ஓட்டு போட்டன.

யானையின் ஆதரவாளர்கள் வாக்குச் சாவடி அருகே மறைத்துக் கொண்டு சிங்கத்தின் ஆதரவாளர்களான மாமிச உண்ணிகளுக்கு அஞ்சி இருந்தன. ஆனால் கடைசிவரை கரடி, புலி, பெண் சிங்கங்கள் சாவடி விட்டு போகவில்லை.

அதனால் தேர்தலில் வெற்றி பெற்றது சிங்கமே.

சில ஓட்டுகளே பெற்ற நரியும், ஒரு ஓட்டு கூட வாங்க முடியாத யானைக்கும் மிஞ்சியது சோகமே.

தக்கார் தகவில ரென்ப ரவரவர்
எச்சத்தாற் காணப் படும்

திருக்குறள் 114

பொருள்
வ.உ.சி உரை

தகுதி உடையவர் தகுதி இல்லாதவர் என்பது இறுதியில் புகழாலோ, இகழ்வாலோ அறியப்படும்.

முந்தைய  நீதி:                                                                                            அடுத்த நீதி
துன்பத்திற்கு துன்பம் கொடு                                             தமிழ் காதல் கதை

No comments:

Post a Comment