பனையூர் தஞ்சை மாவட்டத்தில் ஒரு குக்கிராமம். பெயருக்கு ஏற்றார்போல் ஊரை ஓட்டி ஓடும் காவிரி, கொள்ளிடம் கரை நெடுகிலும் பனைமரங்கள். ஊரில் மொத்தம் 6 வீதிகள். வீதிகளை விட்டு வந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளி. காவிரி ஆற்றுப்படுகைக்கு அருகே உள்ள ஊர். ஆனால், காய்ந்து கிடக்கும் காவிரியால், வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. மக்கள் பருவ மழைக்கு ஏற்றாற்போல் பயிர்களை நடவு செய்து தொழில் நடத்தி வந்தனர். சில உழவர்கள் வங்கியில் கடன் வாங்கி கிணறு வெட்டி, மின்சார நீரேற்றி வைத்து, காய்கறிகள் சாகுபடி செய்தனர்.
கிராமப்புறச் சாலை போட்டிருந்தாலும், அரசுப் பேருந்து பிடிக்க 2 - 3 கிமீ நடந்து செல்ல வேண்டும்.
இந்த கிராமத்தில் தான் நடந்த கதையிது.
வட்டார காவல் நிலையம் 5 கிமீ தூரத்தில். அந்த காவல் வட்டாரத்தில் மொத்தம் 20 கிராமங்கள், 2 ஊராட்சிகள், 40 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள். இருப்பதோ ஒரு துணை ஆய்வாளர், 2 காவலர். அவர்களால் இந்த வட்டத்திற்கு உட்பட்ட எல்லா கிராமங்களையும் மாதம் ஒருமுறை சுற்றி வருவதே பெரிய சுமை. அடிக்கடி மந்திரி வருகை என பாதுகாப்பிற்காக தஞ்சைக்கு போக வேண்டிய சூழல்.
துணை ஆய்வர் செல்வன் தன்னால் இயன்ற அளவிற்கு மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர். காவலர் செயராமன் மற்றும் காவலர் பார்த்தன் இருவரையும் கையூட்டு வாங்க விட மாட்டார் செல்வன். மக்கள் அன்பின் நிமித்தம் காய், கனிகள் வந்து கொடுப்பர். அதனை மட்டும் காவலர்களை பகிர்ந்துக்கொள்ளும் படி சொல்வார்.
மழை பொய்த்தாலோ, கோடையில் கிணற்றில் நீர் வற்றினாலோ அவ்வளவு தான். அறுவடை சிறுக்கும். அந்த நேரங்களில் காய் கனியும் வாராது.
கோடைகளில் கிணற்றில் நீர் வற்றினால், அடுத்த பருவ மழை ஐப்பசியில் தான். அது வரை எந்த உழவுத்தொழிலும் நடக்காது. இந்நிலையால் உழவர் கழனி பக்கம் போகாமல் வேறு தொழில் செய்ய போய்விடுவர். தஞ்சையோ, திருவையாறோ, எங்கோ சென்று மூட்டை தூக்குதல், நீருள்ள இடங்களில் வயல் வேலை என சென்றுவிடுவர்.
இப்படித்தான் ஒரு கோடை முழு வறட்சி. நீர் வற்றிவிட, நடவு செய்த பயிர்கள் பொய்த்தது. வேலை தேடி உழவர் பெருமக்கள் தஞ்சைக்கும் பலர் திருச்சிக்கும் சென்றனர். சிலர் தஞ்சையிலேயே தங்கிவிட்டனர். தினம் போய் வர பேருந்து கட்டணம் மிச்சமாகுமே. பேருந்து நிலையங்களிலேயே தூங்கி எழுவர். கோடை முடிந்து ஆடியில் ஊர் வந்தனர். ஆண்டான்டுகளாக ஆடி மாதம் விதைக்கும் பருவம். தம் வயல்களில் கிணறுள்ள மக்கள் சென்று பார்த்தால் பேரதிர்ச்சி. நீரேற்றி மோட்டார்கள் களவாடப்பட்டிருந்தன. மொத்தம் இருந்த 5 நீரேற்றிகளில் 3 களவாடப்பட்டிருந்தது. கோடையில் யாரோ மக்கள் யாரும் வராததைக் கண்டு களவாடி இருந்தனர். ஊர்மக்களோ காவல் நிலையத்திற்கு படையெடுத்தனர்.
எதற்காக 3 நீரேற்றிகளுக்கு ஊர் மக்கள் திரள வேண்டும்? அந்த மூன்று சொந்தக்காரர்கள் அல்லவா போக வேண்டும்? அம்மூன்று நிலத்தார் பருவம் முழுவதும் குறைந்தது 50 பேருக்கு வேலை கொடுப்பர். உழவுத்தொழிலில் வெளியூரில் இருந்து வேலைக்கு ஆள் கிடைப்பது அரிது. கிடைத்தாலும் போய் வர பேருந்து செலவு என கைக்காசு கரியாகி விடும். அது மட்டுமன்று, கள்வர் மறுபடி படையெடுத்தால், மீதப் பொருட்கள் போகுமே எனக் கவலை.
செல்வன் திரண்டு வந்த மக்களை அமைதிப் படுத்தினார். அவர்களின் புகார் எழுதிக் களவாடப்பட்ட கிணறுகளை பார்வையிட்டார். களவு போய் பல நாட்கள் ஆகியிருந்ததால், களவாண்ட சுவடு இல்லாமல் இருந்தது. பொருட்களை மீட்க முடியாத நிலை.
ஆயினும் உதவி செய்ய முடிவெடுத்து வங்கிக்கு வயலின் சொந்தக்காரர்களை அழைத்துக்கொண்டு சென்றார். வங்கியில் அவர்களின் நீரேற்றிகளுக்கு கடன் நிலுவைத் தொகை காப்பீடு மூலம் சரிகட்டி, புதிய நீரேற்றிகள் வாங்க புதுக்கடன் கொடுக்க பரிந்துரைத்தார். வங்கி மேலாளர், "மறுபடியும் களவு போகாமல் இருக்க என்ன வழிமுறைகள் கையாளப் படும்?" என்று வினவ
செல்வன்,
"அதற்கு நான் பொறுப்பேற்கிறேன். புதிய நீரேற்றிகளுக்கும் காப்பீடு செய்யுங்கள். களவாடாமல் தடுக்க காவலை கிராமத்தில் அதிகப் படுத்துவோம்" என்றார்
ஊர்மக்களை ஊரின் கோவில் மண்டபத்தில் சந்தித்து பேசினார்.
"எல்லாருக்கும் தெரிந்ததே, நம் ஊரில் உள்ள 3 மோட்டார் களவு போயிருச்சு. இப்படி நடக்காம இருக்க காவல் அதிகப் படுத்தனும். என்னிடம் இருப்பது 2 காவலர்கள் தான். ஆனால் சுற்றிலும் பல கிராமங்கள் இருக்கின்றன. எல்லா கிராமங்களுக்கும் நான் சொல்லும் ஒரே அறிவுரை, உங்கள் சொத்துக்களை நீங்களே காவல் புரிய வேண்டும்."
மக்களுக்குள்ளோ சிறிய சலசலப்பு, காவல் புரிவது நம் வேலையா என்ற கேள்வி எழுந்தது.
அப்பொது மக்களில் படித்த சிலர் எழுந்தார்கள்.
அதில் உழவு இளங்கலை பட்டதாரியான குமரன் கேட்டான்
"நம் வீட்டில் பால் காய்ச்சுகிறோம். ஆனால் அதை பூனை வந்து குடித்துவிடுகிறது. என்ன செய்வீர்கள்?"
திலகா எனும் இல்லத்தரசி சொன்னாள்,
"பூனை வராத படி கதவுகளை மூடிவிடுவேன்."
குமரன் உடனே
"பாலை காப்பது உங்கள் கடமை அல்லவா. அது போலே நீரேற்றிகளை காப்பதும் உங்கள் கடமையே" என்றான்.
திலகா கேட்டாள்
"பால் வீட்டுக்குள்ள இருக்கு. மோட்டார் வயல்ல இருக்கே. "
குமரன் சொன்னான்
"அதான் ஐயா சொல்றார், நமக்குள்ளே மக்கள் காவல் காக்கணும். எப்படி காய்கறி வளர்த்து, ஆடுமாடுகள் நுழையாதபடி வேலி போடுறோமோ அதே போல், நாமும் நம் சொத்துக்கள் களவாகாத படிக்கு காவல் செய்ய வேண்டும்."
திலகாவின் அண்ணி சுமதி கேட்டாள்
"அட என்னப்பா நீ!, காலையிலேயா களவாட வருவாங்க. பொழுது சாஞ்சப்புறமா தானே வருவாங்க"
குமரன் பதிலாக
"சரி தான் சுமதியக்கா, இரவிலும் நாம ரோந்து போவணும். நம்ம வாழ்வாதாரம் வயல்களும் அதில் உள்ள மோட்டாரும். அவற்றை நாம தான் காக்கணும். அதுமட்டுமில்லாம மோட்டாரை திருடிப் போகும் களவாணிகள் வருவதே கோடையில் தான், அப்பதான் நம்ம மாமக்களும், அண்ணன்களும் தஞ்சாவூர் திருச்சின்னு போயிடுறாங்க. நாம செய்ய வேண்டியது என்னன்னா கோடையிலும் ஊர்மக்கள் 4 பேர் நிச்சயம் கண்காணிக்கணும். "
குமரன் தொடர்ந்து
"இரவு முழுதும் 2 பேர், 6 மணியில் இருந்து 12 மணி வரை ஒருத்தர். 12 மணியில் இருந்து காலை 6 மணி வரை இன்னொருத்தர். காலையிலும் அதே போல் சுழற்சியில் இருந்தால் களவாணிகளை நாம் அப்புறப்படுத்தலாம். காலையில் காப்பவர்கள் எளிதான வேலை. தூக்கம் வராது. ஆனால் இரவு தான் கடினம்."
கூட்டத்தில் முதியவரான ஊர் பெரியவர் நல்லசாமி எழுந்து கேட்டார்
"வேலைக்கு போவாம யாரு இங்க காவ காப்பாங்களாம்?"
குமரன் பதிலாக,
"தாத்தா, ஒவ்வொரு வீட்டாரும் காவல் செய்வோருக்கு, நாள் ஊதியம் மக்கள் எல்லாரும் குடும்பத்திற்கு 5 ரூபாய் நாள் மேனிக்கு கொடுத்தால், 100 குடும்பங்களுக்கு 500 ரூபாய் வரும். "
"அட என்னப்பா நோவாம நோன்பு கும்பிடுறது போலில்லை இது? நாம தஞ்சாவூர் போயி உழைப்போமாம், இங்கேயே உக்காந்து காவக்காரங்க சம்பாதிப்பாங்களாம்" என விடாய்த்தாள் அலமேலு.
"எல்லாரும் நல்லா யோசிங்க, இங்கேர்ந்து திருவையாறு போக பேருந்து கட்டணம் என்ன ஆகுது? 8 ரூபாய் ஆகுதா? அதைவிட கம்மி தான் ஒரு கும்பத்துக்கு 5 ரூபாய். களவாணிகள் களவாண்டால் நமக்கு நஷ்டம் மோட்டார் மட்டுமல்ல, ஒரு நாளௌக்கு ஒரு ஆள் கூலி 150 ரூபாய் போயிடும். இப்ப யோசிங்க, ஆளுக்கு நாளொன்று 150 ரூபாய் இழந்து தஞ்சாவூரில் இருக்கணுமா, இல்லை நாளுக்கு ரூ 5 கொடுக்கலாமா?"
மக்கள் யோசித்தார்கள். இந்த திட்டத்தை ஆமோதித்தாலும், யார் யார் காவல் செய்வது என முடிவாகவில்லை.
செல்வன் குமரனைப் பார்த்து சொன்னார், "தம்பி, நீ சொல்வது சரிதான். இந்த முறையை நடைமுறைப் படுத்தலாம்.
அதே போல் ஊராட்சியில் வீதிகளில் காணொளி கண்காணிப்பிற்கும் பரிந்துரைக்கிறேன்" என்றார்.
கூட்டம் கலைந்தது. குமரனை தட்டிக்கொடுத்த செல்வன், சொன்னார்,
"இப்படி ஊர்க்காவல் செவ்வணே செய்தால் காவலர் எங்களுக்கு உற்ற உதவியாக இருக்கும். இம்முறை மற்ற கிராமங்களிலும் நான் பரிந்துரைக்கிறேன். அப்படிப்பட்ட கூட்டங்களில் வந்து பேசுவாயா?" எனக்கேட்டார்.
அவன், "சரிங்க ஐயா. எம்பொருள் யாமே காப்பதே நன்று" என்றான்.
அவ்வாண்டு இணையத்தில் ஏதோ தேடப் போக, தமிழ் இணையக் கல்விக்கழக வலை கண்ணில் பட, அதில் உள்ள செய்யுள்கள் செல்வனை ஈர்த்தது. படிக்க படிக்க சுவை கூடியது. பொருளுரையோடு இருந்ததால், மிகவும் ஆர்வமாக படித்தார்.
அடுத்த கோடை வந்தது. செல்வன் பனையூர் மக்களை மறுபடி சந்தித்தார்.
மக்கள் எல்லாரும் விழிப்புடன் இருப்பதாகவும், இரவு காவல் தான் சிரமமாக இருப்பதாகவும் சொன்னார்கள். என்ன செய்வதென ஆலோசனைக் கேட்டார்கள்.
அவர் படித்த நாண்மனிக்கடிகை எனும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் வந்த செய்யுள்
‘கள்வம்!’ என்பார்க்கும் துயில் இல்லை; காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ‘ஒண் பொருள்
செய்வம்!’ என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள்
காப்பார்க்கும் இல்லை, துயில்.
கள்வர்க்கு துயில் இல்லை
காதலிக்கும் யாருக்கும் துயில் இல்லை
செல்வம் ஈட்ட மனம் வைப்பார்க்கும் துயில் இல்லை
செல்வத்தை காப்பார்க்கும் துயில் இல்லை
இந்த செய்யுளை சொல்லி அதன் பொருளையும் சொன்னதும் மக்களுக்கு மகிழ்ச்சி. சரிதான், இப்போது யார் காவல் செய்யக் கூடும் என்று இலைமறைக் காயாக தெரிவித்து விட்டார் காவல் ஆய்வாளர் என அறிந்தார்கள்.
தங்களில் காதல் வயப்படும் வயதில் உள்ள இளைஞர்கள், கிணற்றின் சொந்தக்காரர்கள் என மாற்றி மாற்றி காவல் புரிந்தனர். கள்வர் காவல் அதிகமாக இருப்பதைக் கண்டு பிடித்தனர் ஓட்டம்.
முந்தைய நீதி அடுத்த நீதி
தமிழ் காதல் கதை தேனீக்கடி

No comments:
Post a Comment