வேந்தர்கள் ஆண்ட காலம். அரச அரண்மனையில் நடந்த ஒரு நிகழ்வு. அரசன் இளைய சோழவர்மன், அரசி அழகினியாள். இவர்களுக்கு இரு பிள்ளைச்செல்வங்கள்.
இளவரசன் அரங்க சோழன், இளவரசி கோதை.
அரசவையில் மூத்த அமைச்சர் செந்தெழில் சாத்தனார். அவர் சிறந்த புலவரும் ஆவார். வாழ்க்கையில் எது வரினும் கவிதையாக்கி விடுவார் சாத்தனார்.
ஒரு இனிய பிற்பகல் பொழுதில் இளவரசி அரண்மனை தோட்டத்தில் தன் தோழி தெய்வானையோடு விளையாடச் சென்றாள். தோட்டத்து எழிலை எவ்வளவு தான் பார்த்து மயங்குவது? சிறு பிள்ளைகள் தானே, பந்து விளையாட ஆவல் எழுந்தது.
இப்போது நம் கையில் ரப்பர் பந்துகள் இருக்கின்றனவே, அதெல்லாம் அக்காலத்தே கிடையாது. பந்தாக கந்தல் துணியோ, தொடுத்த மலர்களையோ தான் பிள்ளைகள் தூக்கிப் போட்டு ஆடுவர்.
கோதை சில அரச ஊழியர்களை வரவழைத்து தோட்டத்தில் பூத்திருந்த மல்லிகை, முல்லை மலர்களை கொய்து, தொடுத்து தர கேட்டாள். ஊழியர்களும் செய்து தந்தனர்.
முல்லையும் மல்லிகையும் மணம் வீச, மாலையை பந்தாகச் சுருட்டி சிறுமியர் ஆட ஆரம்பித்தனர்.
பூப்பந்தை இளவரசி கோதை தூக்கிப் போட, தெய்வானை பிடிக்க, பின்னர் தெய்வானை தூக்கி எறிய, கோதை பிடிக்க, என மிக மகிழ்வாய் ஆடினர் சிறுமியர்.
தோட்டத்திலேயே, இவர்கள் ஆடும் இடத்தில் நறுமணம் கமழ்ந்தது. அதனால், பல வண்டுகளும் தேனீக்களும் ரீங்காரமிட்டன.
ஒரு நிலையில் கோதை தூக்கி எறிய, அப்பந்து தோட்டத்தில் உள்ள சிறு மதிலிற்கு அப்பால் விழுந்தது. அதை எடுத்து வர தெய்வானை மதிலில் உள்ள மரக்கதவை திறந்து போனாள். கையில் பந்தை எடுத்தவள், ஐயகோ என அலறிக்கொண்டே உள்ளே ஓடினாள்.
கண்கலங்கி ஓடிவரும் தோழியைக் கண்டதும் இளவரசியும் ஓடி போய் என்னவாயிற்று? எனக்கேட்டாள். தெய்வானை சொன்னாள், மலர்ப்பந்தில் ஏதோ முள் இருந்தது, அது என் கையை தைத்துவிட்டது என்றாள்.
மல்லிகை முல்லையில் ஏது முட்கள்? என பந்தை வாங்கியவள் சில தேனீக்கள் உள்ளே இருப்பதைக் கண்டாள்.
அழுது நிற்கும் தோழியை தைத்தது முள்ளல்ல என புரிந்து கொண்ட இளவரசி, தோழியை தட்டிக்கொடுத்தாள்.
தேனீ தீண்டிய விரல் வீங்க ஆரம்பித்தது. அதைக்கண்ட தெய்வானை, இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள்.
சாத்தனார் அரண்மனைக்கு அரசரைக் காண வந்திருந்தார். அழுகைக் குரல் கேட்டதும் தோட்டத்திற்கு ஓடி வந்தார்.
நடந்ததை கோதை கூற, சாத்தனார் உடனே
"மலரொத்த உன்கை அறியாத தேனீ
அலறிடத் தீண்டியதே பாவாய் -அலறாதே
மெய்வலியும் போகுமே விட்டு"
என கவிதை பாடினார்.
சாத்தனாரின் கவிதை நயமாக இருந்த போதும் இளவரசிக்கு சினமேலிட, என்ன அமைச்சரே, கவிதை பாட நேரமா இது? வலியால் துடிக்கிறாள் என்தோழி, அதற்கு வழிசொல்லக் கேட்டால், கவிதை படிக்கிறீர் என பொரிந்தாள்.
இளவரசியின் சினக்குரல் கேட்டு அரசியார் அங்கே வந்தாள்.
அரசி வருவதற்குள் அமைச்சர் அரண்மனை காவலனை அழைத்து, உடனே மருத்துவரை கூட்டிவா. இளவரசியின் தோழிக்கு தேனீ தீண்டியது எனச்சொல் என்றார்.
நடந்ததெல்லாம் கேட்ட அரசி, அடடா, எம்மக்கள் தேனீக்களால் தீண்டப்படுவது நல்லதன்றே. இதற்கொரு வழிசெய்ய வேண்டுமே, என சிந்தித்தாள்.
அரண்மனை வேலைக்காரர்களின் தலைவனை அழைத்து, தேனீக்கள் வராதபடி நுண்ணிய சீலைகளால் தோட்டம் முழுதும் அடைக்க உத்தரவிட்டாள்.
சாத்தனார் உடனே, அரசியாரே, தேனீக்கள் இல்லை என்றால் அயல் மகரந்தச் சேர்க்கை ஆகாது. தோட்டத்தில் உள்ள எதுவும் காய்க்காதே!, என்றார்.
அரசியார், சினத்தோடு, என்ன அமைச்சரே, கவிதை பாடியது போதாதென, இனி தேனீ தீண்டாதபடி வழி சொன்னால், அதிலும் குற்றம் கண்டுபிடித்தால் எப்படி? என சினமாய் பேசினாள்.
அரசியின் சினக்குரல் கேட்டு, வில்பயிற்சியில் இருந்த அரசனும் இளவரசனும் தோட்டத்தில் வந்தனர்.
அங்கு நடந்ததை அரசி விளக்கிட
இளவரசன், இதை தீர்க்க என்னிடம் ஒரு நல்ல வழி இருக்கிறது. எங்கள் குருகுலத்தில் உள்ள சிறுவனின் தகப்பன் மரவேலை செய்பவர். அவரிடம் மரத்தால் ஆன பந்து செய்யச் சொல்வோம். மரப்பந்தை தேனீக்கள் தீண்டாது.
சாத்தனார் உடனே, இளவரசே!, நல்ல வழியாகத் தோன்றினாலும், ஆண்மக்கள் விளையாட்டு வேறு. பூவினும் மெல்லிய பெண்டிர் விளையாட, மரப்பந்து உதவாது என்றார்.
அரசருக்கு தலைக்கேறியது சினம். சாத்தனாரே, என்ன இது தீர்க்க வழி சொன்னால் இப்படி குற்றம் கண்டுபிடித்தால் எப்படி? என்று கடிந்து கொள்ள
அரசியாரோ, சாத்தனார் சொல்வது மெய்யே. ஆடவர் ஆட மரப்பந்து ஆகும். பெண்டிருக்கோ அது சரிவராது என்றாள்.
அரசன் உடனே, அமைச்சரே, இனி நாட்டில் யாருமே மலர்ப்பந்து ஆடக் கூடாதென சட்டம் இயற்றலாமா?
அமைச்சரோ, "அரசே!, சட்டம் இயற்றலாம். ஆனால் எப்படி சட்டத்தை மக்கள் பின்பற்றுகின்றனர் என கண்காணிப்பது? விளையாட பந்து செய்யக்கூடாது என அரசாணை யிட்டால் நன்மையை விட அது தீமையே விளைவிக்கும்" என்றார்
அரசருக்கு தலைக்கேறியது சினம். சாத்தனாரே, என்ன இது? எது சொன்னாலும் இப்படி குற்றம் கண்டுபிடித்தால் எப்படி?
அரசே!, அரண்மனை மருத்துவர் சிறிது நேரத்தில் வந்திடுவார். அவரை கேட்கலாம் என்றார் சாத்தனார்.
சிறிது நேரம் கழிந்ததும் மருத்துவர் வந்தார். நடந்ததைக் கேட்ட மருத்துவர், தேனீ தீண்டியதெங்கே எனக் கேட்க, தோழியையும் இளவரசியையும் தேடினர்.
பெரியோர் பேசிக்கொண்டிருக்க, வலி நீங்கிய தோழியும் இளவரசியும் ஒளிந்து விளையாட போய்விட்டனர்.
காவலர்கள் தேடி அவர்களை கொண்டு வர, மருத்துவர் தீண்டிய விரலை கண்டார். வீக்கம் தணிந்திருந்தது.
மருத்துவர் சுண்ணாம்பை தடவி, நாளைக்குள் சரியாகிவிடும் என்றார்.
இது நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என அரசர் கேட்க, அரசே! மலர்களால் ஆன பந்து மதில் வெளியே விழுந்தது. அதை எடுக்கப் போக சில நிமிடங்களுக்குள் மலரின் நறுமணத்தால் தேனீக்கள் அதில் உள்ள தேன் பருக வந்துவிட்டன. மலரை தொடுத்தப்பின்னர் அந்த சரத்தை நீரில் அமிழ்த்தி சிறுது நேரம் விடச் சொல்லுங்கள். அப்போது மலரில் இருக்கும் பல மகரந்தங்கள் நீரில் போய்விடும். மணமும் குறையும். தேனீக்கள் அம்மலர்ப் பந்தை தாக்குவதும் குறையும்.
அடடா! என்ன எளிமையான வழி! வியந்த மன்னர் சில பொற்காசுகளை பரிசாக வழங்கினார்.
என்ன தான் அறிவில் சிறந்தவராக அமைச்சர் இருந்தாலும் அவரால் எளிய வழியைக் கூற முடியவில்லை.
அரசியாரோ, தம் மக்களுக்கு தேனீக்களின் தொல்லை இருக்கக் கூடாது என்பதே கவலை.
அரசரோ, நாட்டு மக்கள் யாவரையும் தன் மக்கள் போல் எண்ணியதால், சட்டம் இயற்றலாமா, என நினைத்தார்.
மருத்துவரோ எளிய வழி, சிறந்த வழியைச் சொல்கிறார்.
தமிழில் இதற்கு சிறந்த செய்யுள் பார்ப்போமா!
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
திருக்குறள் எண்:517
அதிகாரம்:தெரிந்து வினையாடல்

No comments:
Post a Comment