முந்தயை காலங்களில் கலைகளை போற்றி வளர்த்தனர் மக்கள்.
ஆடல் கலை அக்கலைகளில் முதன்மையாக இருந்தது என்றால் மிகையாகாது. அரசர்களும் எல்லாவித கலைகளையும் ஆதரித்து வந்தனர். அரசவையில் அமைச்சர் பெருமக்கள் கவிதை, நிதி போன்றவற்றில் நிபுணராய் இருந்தால், ஆடல் கலைக்கென மாதர் சிறந்து விளங்கினர்.
அரசவைகளில் ஆடும் மகளிரை கூத்தாடும் கிழத்திகள் என்றோ கூத்தியர் என்றோ அழைப்பதுண்டு.
அரசவையில் ஆடுவதால் இந்த கூத்தியர் என்னும் சொல்லே பிழன்று வரைவின் மகளிரைக் குறிக்கும் சொல்லானது வேறு கதை.
ஆடலில் சிறந்து விளங்கிய மங்கைகள் பல்வேறு ஆயுதங்களை ஏந்தி ஆடுவதும் உண்டு. சில திருவிழாக்களில் ஆடவர் வாளேந்தி ஆடுவதை பார்த்திருக்கோம் அல்லவா, அப்படியே கூத்தியரும் ஆடுவதுண்டு.
இக்கதை பண்டைய சோழ காலத்தில் நடந்த கதைகயாகக் கொள்க.
அரசேந்திரனின் வழிவந்த சிற்றரசன் அமரேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்து அரசன். அவனுடைய அரசவையில் ஆடல் கலையில் பெயர் பெற்ற மங்கை விழிஎழிலாள். பெயருக்கேற்ற வண்ணம் அழகிய கண்களைக் கொண்டவள்.
அரசவையில் ஆட்டம் ஆடினாலும் தன் கற்பு தவறாத பெண்மணி விழிஎழிலாள்.
அவளுடைய குருநாதர் அவளின் தந்தையார் நடராசர். தந்தை ஊர் ஊராகச் சென்று மேடையில் ஆடியவர். அவருக்கு இரு மனைவிகள், 10 பிள்ளைகள்.
மூத்தவள் விழிஎழிலாள். பிறந்த குழந்தையின் கண்ணழகைக் கண்டு இவளே என் கலை வாரிசு என முடிவெடுத்தார் நடராசர். மற்ற பிள்ளைகளை விட அதிகம் கவனம் செலுத்தி, தன் கலையை அவளுக்கு கற்றுக் கொடுத்தார். விழிஎழிலாளும் நன்றாக கற்று அரங்கேற்றம் செய்தாள். அரங்கேற்றத்திற்கு வந்த அரசன், அவளின் ஆடும் எழிலைக் கண்டு அரசவையில் ஆடல்கலைக்கு அமைச்சராக நியமித்தார். ஆயுதமேந்தி ஆடுவதில் இவளுக்கு இணை மும்மன்னர்களின் அரசவையில் யாருமில்லை.
கதை கொண்டு ஆடுவதும், வாள் சுற்றி ஆடுவதும், வேல் சுற்றி ஆடுவதும் பார்க்க கண்கொள்ளாது.
அவளின் ஆட்டத்தை கண்டுகளிக்கவே பல அரசர்கள் அமரேந்தினின் அரசவைக்கு விருந்தினராய் வருவதுண்டு.
மற்ற பிள்ளைகளோ சிறிதும் கலையோ, படிப்பறிவோ இல்லாது அக்காளின் வருவாயில் வாழ்ந்தனர்.
தந்தையார் தன் மகள் அரசவையில் நடன அமைச்சர் என்ற பூரிப்பில் சில நாள் வாழ்ந்து காலமடைந்தார்.
ஆயுதமெடுத்து ஆடுவோர் கை ஆயுதத்தைவிட, உடல் எழிலைவிட, அவர்களின் கண்களில் காட்டும் சினமே முதலில் கவனிக்கப்படும். விழிஎழிலாளின் சினந்த கண்களை காண கண் கொள்ளாது.
ஒவ்வொரு அமாவாசை மாலையும் அரசன் காவிரிக்குச் சென்று நீராடிவிட்டு மணிமண்டபத்தில் அமர, வாளாட்டம் காண்பது வழக்கம்.
எழிலாளின் வாளாட்டம் கண்டுத்தான் சந்திரன் அன்று அஞ்சி வராமல் போனதாக புலவர்கள் கவிதை பாடினர் என்றால் பாருங்களேன்!
இப்படியே வாழ்க்கை ஓட, ஒரு நாள் வாளாட்டத்தின் போது கைப்பிடிவிட்டு வாளொன்று விலக, வாளின் கூர்ப்பகுது எழிலாளின் தோளை கிழித்திட்டது. குருதி பொங்கி வந்திட, அரசன் மருத்துவரை அழைத்திட்டார்.
மருத்துவர் வந்து மூலிகைகளால் கட்டுப்போட்டனர். ஆனால் இனி தோள் சரியாகும் வரையில் ஆடமுடியாது என்றனர்.
அரசரோ கனிவுள்ளம் படைத்தவர். சில திங்கள் ஓய்வெடு என சொல்லிவிட்டார்.
வேலைக்கு போகாமல் ஊதியம் வாங்க விழிஎழிலாளுக்கு மனதில்லை. அதனால் அவள் கோட்டைக்கே செல்லவில்லை.
தாயாரும் சிற்றன்னையும் எவ்வளவோ கடினப்பட்டு தாம் சேர்த்து வைத்த செல்வத்தால் பத்து மக்களுக்கு போதுமானதாக உணவில்லை.
அப்போது தான் உடன்பிறந்தோர் அக்காளை சார்ந்து வாழ்வது தவறென உணர ஆரம்பித்தனர். அவரவர் தத்தம் திறனுக்கேற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். அக்காளுக்கு பெருமிதம். தம்பி தங்கையர் பொறுப்பேற்றதைக் கண்டவள் பூரித்தாள்.
சில திங்கள் போனதும் பயிற்சியில் ஈடுபட்டு, மீண்டும் அரசவையில் ஆடலரசியாய் சேர்ந்தாள்.
இந்த கதைக்கேற்ற ஒரு தமிழ்ச்செய்யுள் பார்ப்போமா!
கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந்
தாளாளர்க் குண்டோ தவறு.
நாலடியார் - 191
பொருள்
குளம் நிறைந்து வழியும் போது வழியே உள்ள பயிர்களுக்கு நீர் வரும். அது போல, ஒருவரின் வருவாயில் உறவினர் உண்டு தூங்கினால், அப்படிப்பட்டவரின் வறுமையில் கேளிர் எல்லாரும் பசியால் வருந்துவர்.
அதனால். வாளாடும் கூத்தியர் எப்படி தன் கண்ணை பயன்படுத்த வேண்டுமோ, அப்படியே தன் கிளைகளுக்காக எண்ணி தாளாளன் தவறாமல் உழைக்க வேண்டும்.
முந்தைய நீதி
தேனீக்கடி

No comments:
Post a Comment